தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2013

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு.

பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள்பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.படிப்பில் திறமையான மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் என பிரித்து, காலை-மாலை என தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி