பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2013

பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங்.

வரும் கல்வியாண்டு முதல் எம்.ஏ/ எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 பல்கலைகள் உள்ளன. இவற்றில் 62 அரசு கல்லுõரிகள், 132 உதவி பெறும் கல்லுõரிகள், 500க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லுõரிகள், இணைப்பு பெற்றுசெயல்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் படிப்புகள் ஒரேபல்கலைகளின் கீழ் இணைப்பு பெற்றுள்ளதால் மாணவர் சேர்க்கை மாநில அளவில் ஒரே கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது.அது போன்று எம்.ஏ/எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது.இதுகுறித்து அக்கூட்டத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கூறுகையில், கலைஅறிவியல் கல்லுõரிகளில் உள்ள எம்.ஏ/எம்.எஸ்சி., போன்ற முதுகலை படிப்புகளுக்கு அக்கல்லுõரி இடம்பெற்ற பல்கலையில் கவுன்சிலிங் மூலம் மாணவர்சேர்க்கை நடைபெறும்.தொடர்ந்து பி.ஏ/பி.எஸ்சி., போன்ற இளங்கலை படிப்புகளுக்களுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. இப்புதியமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி