போதுமான மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால், பல இன்ஜினியரிங்கல்லுõரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு அனைத்து இந்திய தேசியதொழில்நுட்ப கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.,) விண்ணப்பித்துள்ளன.இந்தியாவில் இன்ஜியரிங் படிப்புக்கான மவுசு இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. இதன் விளைவாக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுõரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.அக்கல்லுõரிகளில் அனைத்து இடங்களும் நிரம்புகிறதா என்று கேட்டால் கேள்விக்குறியே. ஏனெனில், எந்தளவுக்கு கல்லுõரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அதே அளவுக்கு காலியிடங்களும் அதிகரிக்கின்றன. இந்தாண்டு தேசிய அளவில், புதிதாக 180 இன்ஜினியரிங் கல்லுõரிகள் தொடங்குவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., இடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.அதே நேரத்தில் 40 கல்லுõரிகள் மூடுவதற்கு அனுமதி கோரியுள்ளன. இதில் 30 கல்லுõரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 2012 - 13 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள இன்ஜினி யரிங் கல்லுõரிகளின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. இவற்றில்,கடந்தாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.இதில் 50 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 48 விதமான இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் வெறும் 10 மாணவர்களுக்கு கீழே தான் சேர்ந்துள்ளனர். இது, புதிதாக கல்லுõரி தொடங்க நினைப்பவர்களை எந்தளவுக்கும் யோசிக்க வைப்பதில்லை. கல்லுõரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் குறைவு காரணமாகவும், காலி இடங்கள் அதிகரிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி