மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க “ஒலி அலைகள்” - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2013

மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க “ஒலி அலைகள்”

மாணவர்களின் அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்க ஒலி அலைகளைப் பயன்படுத்தும் (PHONEMIC INTELLIGENCE)என்ற புதிய முறையை கண்டறிந்துள்ளதாக திரிபுரா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 10ம் தேதி) நடைப்பெற்றகூட்டம் ஒன்றில் இந்த அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் பிள்ளை என்பவர் அது குறித்து விளக்கினர்.சிவ சூத்ரா என்ற இந்திய முறையை அடிப்படையாக கொண்டு PHONEMIC INTELLIGENCE முறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவித ஒலி அதிர்வுகளை உருவாக்குவதன் மூலம் மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வதே இதன் அடிப்படை என்றும் அவர் தெரிவித்தார்.இதன் மூலம் மாணவர்களின், கற்கும் திறன், மன அமைதி, ஆளுமைத்திறன் அதிகரிப்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாகவும் பாஸ்கரன் பிள்ளை கூறினார். சுமார் இரண்டாயிரத்து 450 மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி