"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பரில், குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பாணையை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில்,அருண்குமார் என்பவர், தாக்கல் செய்த மனு:முதல்நிலை தேர்வில், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், நடுவில், இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.எழுத்துத் தேர்வில் தகுதி பெற, முதல்நிலை தேர்வு முக்கியம். இதில், தனித் திறன் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு பாதகம் ஏற்படலாம்; எனவே, இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: தேர்வு நடவடிக்கைகளை எளிமையாக்கவும், தரத்தை உயர்த்தவும், திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கைகள் துவங்கிய பின், சேர்க்கை தகுதியில் மாற்றம் கொண்டு வருவது, மாநில அரசு வசம் இல்லை. மனுதாரர், இனிமேல் தான், முதல்நிலை தேர்வில் கலந்து கொள்ளப் போகிறார்.பொது அறிவு கேள்விகள் தவிர, ஒரு பதவியை வகிக்க, தனிச் சிறப்புஉள்ளதா என்பதை சோதிக்கும் வகையிலான தேர்வும் நடத்தப்படுகிறது. தனிச் சிறப்பு தொடர்பான கேள்விகளுக்கு, தனியாக மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தியதை, மனுதாரர் எப்படி எதிர்க்க முடியும் என, தெரியவில்லை.எந்த ஒரு பணியிலும், ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், அந்த நபருக்கு, சரியான நடவடிக்கை, திறன் இருக்க வேண்டும். அந்தப் பணிக்கு தேவையான தகுதி இல்லாமல், அதில் அவரால் பணியாற்ற இயலாது. ஒரு பணியில் நியமிக்க, ஒருவரின் திறமையை சோதிப்பது அவசியம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குரூப்-1 பணியிடம் என்பது, மாநிலஅரசுப் பணியில், உயர் பதவிகளை கொண்டது. எனவே, இந்தப் பணிகளில்நுழைவதற்கு, ஒருவரின் திறமையை சோதிப்பது என்பது, அரசு மற்றும்டி.என்.பி. எஸ்.சி.,யைப் பொறுத்தது. இதில், தலையிட முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி