பத்திர பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2013

பத்திர பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்.

பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.நில ஆவணங்கள் உள்ளிட்ட, பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர், தமிழக ஆவண எழுத்தர்கள் சட்டத்தின்படி, முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே அமலில் இருந்த வணிக வரித் துறை மற்றும் பதிவுத்துறை சட்டத்தில், திருத்தம் ஏற்படுத்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன், 10ம் வகுப்பு தேர்ச்சியும், 10ம் வகுப்பில்தமிழ் மொழி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில், கன்னியாகுமரி, நீலகிரி போன்ற கேரள எல்லை மாவட்டங்களில் உள்ள பலர், மலையாள மொழியை படித்து, மலையாள மொழியில் ஆவணங்களை எழுதி வந்தனர். தமிழில் ஆவணங்கள் எழுதும் பழக்கம் நடைமுறைக்கு வந்த பின், மலையாள மொழியை முதன்மை பாடமாக படித்தாலும், தமிழ் மொழி தேர்வு, கூடுதலாக எழுதி வந்தனர். தற்போது, "உரிமம் பெற விண்ணப்பிப்போர், தமிழ் மொழியை முதல் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ படித்து, 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்., 15க்கு முன், உரிமம் பெற்றோர் அல்லது உரிமம் புதுப்பித்தோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான ஆணை, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி