அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2013

அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு.

அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி