குரூப்-2: நாளை 4ம் கட்ட கலந்தாய்வு துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2013

குரூப்-2: நாளை 4ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்.

குரூப் 2 பணியிடங்களில் நிரப்பப்படாமல் உள்ள 230 பதவிகளுக்கு நாளை, நான்காம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டஅறிவிப்பு:
குரூப் 2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2011 ஜூலை 30ம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் ஜூலை 27ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மூன்று கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வுகளில் 2 ஆயிரத்து 941 பேருக்கு மட்டுமே பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. மேலும், 230 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் வரும் நாளை கலந்தாய்வு நடைபெறும்.கலந்தாய்வு நடைபெறும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். கலந்தாய்வில் பங்கேற்கத் தவறினால் விண்ணப்பதாரர்கள் தங்களது தரவரிசையையும், பதவி ஒதுக்கீட்டுக்கானமுன்னுரிமையையும் இழக்க நேரும். கலந்தாய்வில் பங்கேற்க மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என அரசுப் பணியாளர் தேர்வாணையம்அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி