பிளஸ் 2 கணிதத் தேர்வில் 2010-ம் ஆண்டைப் போன்று கடின வினாக்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இதனால் நடப்பாண்டில் சென்டம் (200-க்கு 200) எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும் என்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.தமிழகம், புதுவையில் மார்ச் 1-ம் தேதி தொடங்கி பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடங்கள், இயற்பியல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு முக்கியமான பாடமாகக் கருதப்படும் கணிதத் தேர்வு நேற்று நடைபெற்றது.ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளில் எளிமையான வினாக்கள் இருந்ததால் மகிழ்ச்சியான மனநிலையில் கணிதத் தேர்வுக்குச் சென்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் எளிமையானதாக இருந்த நிலையில் 6 மதிப்பெண்,10 மதிப்பெண் வினாக்கள் கடினமானதாக இருந்துள்ளன.பிரிவு பி-யில் 6 மதிப்பெண் வினாக்கள் 16 கேட்கப்பட்டு அவற்றில் 10-க்கு விடையளிக்க வேண்டும். ஆனால் அவற்றில் 5 வினாக்களைத் தவிர மற்ற அனைத்தும் கடினமானதாகவே இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் கட்டாயமாக விடையளிக்க வேண்டிய முறையே 6, 10 மதிப்பெண் வினாக்களான 55, 70-வதுவினாக்கள் கடினமானதாக இருந்ததாகவும், மொத்தத்தில் கணித வினாத்தாள் தங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர்.நடப்பாண்டில் கணித வினாத்தாள் 2010-ம் ஆண்டு வினாத்தாளைப்போன்றே கடினமானதாக இருந்ததாகக் கூறும் ஆசிரியர்கள், அரசுப் பள்ளி, கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதப் பாடவினாக்கள் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகக் கூறுகின்றனர்.இதனால் தேர்ச்சி விகிதம் சரிவடைவதுடன், முழு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையக் கூடும் என்கின்றனர். 10 மதிப்பெண் வினாக்களில் 3-ம், 6 மதிப்பெண்வினாக்களில் 2-ம் மட்டுமே சராசரி மாணவர்களால் எளிதில் பதிலளிக்கக் கூடிய விதத்தில் இருந்ததாக கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கணிதத்தில் 2010-ம் ஆண்டில் 1,762 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர். 2011-ல் 2,720 மாணவர்களும், 2012-ல் 2,656 மாணவர்களும் 200-க்கு 200 பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி