மணிப்பூரில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கேள்வித்தாளுடன் விடைகளும் சேர்த்து அச்சடிக்கப்பட்ட தாள் கொடுக்கப்பட்டது. இதை தாமதமாக கண்டறிந்த அதிகாரிகள், தேர்வை ரத்து செய்ததுடன், வேறொரு நாளில் தள்ளிவைத்தனர்.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், நேற்று முன்தினம், பிளஸ் 2, இன்ஜினியரிங் டிராயிங் தேர்வு நடந்தது.தேர்விற்கான, கேள்வித்தாளின் பின்புறத்தில், கேள்விகளுக்கான விடையும் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதை சற்று தாமதமாக பார்த்த மாணவர்கள், தேர்வு அதிகாரிகளிடம் கூறினர். உடனடியாக, கேள்வித்தாள்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்ஜினியரிங் டிராயிங் தேர்வு, 25ம்தேதி தேர்வு நடக்கும், என, அறிவித்தனர். இதனால், மாணவர்கள் கவலை அடைந்து உள்ளனர்."ஏற்கனவே இந்த தேர்வுக்காக தயாரான நிலையில், தேர்வுத்துறை செய்த குளறுபடியால், நாங்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டியுள்ளது" என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி