தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் விடுதிகளும் உள்ளன. இதில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் 44 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு ரூ.35 கோடியே 4 லட்சம் செலவில் சொந்தக் கட்டிடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவற்றில் மலைப் பகுதிகளில் விடுதி ஒன்றுக்கு ரூ.88.53 லட்சம் என்ற வீதத்தில் 50 மாணவ, மாணவியர் தங்கக்கூடிய 3 விடுதிகளும், சமதளப் பகுதிகளில் கட்டப்படும் விடுதி ஒன்றுக்கு ரு.78.99 லட்சம் வீதத்தில் 50 மாணவ, மாணவியர் தங்கக்கூடிய 41 விடுதிகள் கட்டப்படும்.இந்த விடுதிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடம்பாறை, தொண்டாமுத்தூர், எஸ்.புங்கன்பாளையம், வால்பாறை, சின்னத்தடாகம் ஆகிய 5 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் களிமந்தை, பழநி,நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், நாமகிரி பேட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓக்கூர், வல்லத்திரா கோட்டை, பி.அழகாபுரி, மேலதானியம், ஓடுகம்பட்டு, கீரனூர் சேலம் மாவட்டத்தில் நெய்மலை, மானூர், தலைவாசல், சிவகங்கை மாவட்டத்தில் இளை யான்குடி, வேதியரேந்தல், சித்தலூர், நீலகிரி மாவட்டம் ஓவேலி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காஞ்சி மற்றும் கலசப்பாக்கம், தூத்துக்குடிமாவட்டம் நாசரேத், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், துலுக்கார்பட்டி, ராதாபுரம், தென்மலை, விஸ்வநாதபேரி, திருச்சி மாவட் டம் பொய்கைப்பட்டி, வாளசிராமனி, கானகிளியநல்லூர், விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி, செவலப்பாரை, செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், நாகல்கேணி, தையூர் ஆகிய 3 இடங்களிலும், வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு, அரக்கோணம் ஆகிய 2 இடங்களிலும், என மொத்தம் 44 இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி