பங்கேற்போர் திறனை கண்டறிய சிவில் சர்வீசஸ் தேர்வில் புது மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2013

பங்கேற்போர் திறனை கண்டறிய சிவில் சர்வீசஸ் தேர்வில் புது மாற்றம்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் தேர்வில் பொது பாட பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் , மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான,அறிவிப்பை, மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற நிர்வாக பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.இதில், முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என நடத்தப்பட்டு வருகிறது.முதல் நிலை தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான், முதன்மை தேர்வுக்கு தகுதி பெற முடியும். முதன்மை தேர்வில், பொதுப்பாடத்திற்கு கூடுதலாகமுக்கியத்துவம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது பாடம் பிரிவில், நான்கு தாள்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும், தலா, 250 மதிப்பெண்கள் உண்டு. இது தவிர, இரண்டு விருப்ப பாடங்களுக்கு தேர்வு இருக்கும். இதற்கு, தலா, 250வீதம் மதிப்பெண் வழங்கப்படும்கட்டுரை மற்றும் ஆங்கிலம் தாளிற்கு ஏற்கனவே உள்ளபடி, 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். பிரதான தேர்விற்கான மொத்த மதிப்பெண், 1,800 ஆகும். யு.பி.எஸ்.சி., அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில், சிவில் சர்வீஸ் தேர்வில், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில், தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு உள்ள திறன், சமூக -பொருளாதார இலக்குகளை அடையும் விஷயங்களில் புரிந்துணர்வு ஆகியவற்றை கண்டறியும் வகையில், இத் தேர்வுஅமையும். இம் மாற்றத்திற்கு, பிரதமர் அலுவலகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்ததும் , இது நடைமுறைக்கு வருகிறது.சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு,மே 26ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி