சென்னை கோட்டூர் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை பிரிட்டன் அரசின் துணை தூதர் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கலந்துரையாடினர்.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களிடம் பேசிய இந்தியாவுக்கான பிரிட்டன் துணை தூதர் மைக், பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இந்தியாவைப் பொருத்தவரை ஒடிசா, பிகார், மத்தியப் பிரதேசம் போன்றமாநிலங்களில் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு உதவ முயற்சி செய்வதாகவும் கூறினார். இங்கிலந்து மாணவர்களைவிட இந்திய மாணவர்களிடம் படிப்பின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் அதிகமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நல்ல கல்விக் கட்டமைப்பைக் கொண்ட தமிழகத்தில், அனைத்து மாணவர்களும் கல்வி பெற அரசு வகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் ஆர்வத்தை வீணடிக்காமல், அரசு அதற்கேற்ற கல்வியைக் கொடுக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் மைக்.சென்னையில் ஏழு மாநகராட்சிகளில் செயல்பட்டு வரும் TEACH FOR INDIA என்ற அமைப்பினர், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுடன் பல துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து பேச வைத்து வருகின்றனர்.தமிழகம் கல்வி முறையிலும், நிதி நிலைமையிலும் சிறந்து விளங்கும்மாநிலமாக இருக்கிறது. ஆனால், அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வியறிவு பெறும் நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், எந்த சாதி, மத பின்னணியில் இருந்து வந்தாலும் அந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி