எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

எதிர்காலத்திற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்வு செய்வது எப்படி?

எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புக்களை எவ்வாறு தேர்வு செய்வது என்று, மதுரையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கினார்.மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த 2வது நாள் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உயர் கல்வியை தேர்வு செய்வதை பொறுத்து, மாணவர்களில் எதிர்காலம் அமையும். வாய்ப்பை தேடும் கல்வியைவிட, வேலை வாய்ப்பு தேடி வரும் கல்வியை தேர்வு செய்வது தான் மாணவர்களுக்கு புத்திசாலிதனம்.இதற்கு உரிய படிப்பு, தரமான கல்லூரியை தேர்வு செய்வதுடன் மாணவர்களின் சாமர்த்தியமும் முக்கியம். பொறியியல் துறையில் இஇஇ, சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் போன்ற பிரிவுகளுக்கு எதிர்காலம் உள்ளது. குறிப்பாக மெக்கானிக்கல் பாடப்பிரிவில் பெண்களுக்கு சிறப்பானஎதிர்காலம் உள்ளது. பொறியியல் துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், வளாக நேர்காணலில் தேர்வு பெறுவதற்கான திறமையை வளர்த்துக்கொள்வது முக்கியம்.கடந்த இரு ஆண்டுகளில் 8 சதவீதம் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தொழிலாக மாறிவிட்டன. எனவே, வரும் ஆண்டுகளில் வேளாண் படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அனிமேஷன், விஷூவல் எபக்ட், ஆங்கில இலக்கியம், கணிதம், சுற்றுலா, பொருளியல், வங்கி, ஐ.டி., சட்டம் போன்ற படிப்புகளுக்கு எதிர்காலம் உள்ளது. மருத்துவ படிப்பில் சேர குறைந்தது 198க்கு மேல்"கட்ஆப்&' மார்க் தேவையாக இருக்கும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி