பள்ளிகளில், மாணவியருருக்கு எதிரான, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை களைத் தடுக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவி யருக்கு, தற்காப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.பள்ளிகளில் படிக்கும் சிறுமிகள், பாலியல் கொடுமை களுக்கு உள்ளாவது, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. இதைத் தடுக்க, மாநிலஅரசுகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.இதுதொடர்பாக, ராஜ்யசபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசிதரூர் கூறியதாவது:பள்ளிகளில், மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்முறைகள் கவலையளிப்பதாக உள்ளன. இதை தடுக்க, மாணவியருக்கு, உடற்கல்வி வகுப்பில், தற்காப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், கடந்த மாதம் கடிதம் எழுதப்பட்டுள்ளது.பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பல்கலை கழக மானிய குழு அதிரடி படை ஒன்றை அமைத்துள்ளது. மேலும், பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், பெண்களுக்கான கல்வி தகவல் மையங்கள், நாடு முழுவதும், 158 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில், 85 தகவல் மையங்கள், பல்கலை அளவிலும், 76 மையங்கள் கல்லூரிகளிலும் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி