நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அரசு அலுவலர்களுக்கு சலுகை விலையில் மினி பிரிட்ஜ் விற்பனை செய்யப்படுகிறது.இந்திய தபால்துறை, வருமானத்தை அதிகளவு ஈட்டும் வகையில் தங்ககாசு விற்பனை, சோலார் விளக்கு விற்பனை, மினி பிரிட்ஜ் விற்பனை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் இத்திட்டங்களில் அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மினிபிரிட்ஜ் விற்பனையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 8 கிலோ திறன் கொண்ட இந்த மினி பிரிட்ஜ், ஆன்லைன் வசதி கொண்ட அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதன்விலை ரூ.3,790. அரசு ஊழியர்களுக்கு சலுகையாக ரூ.300 குறைக்கப்பட்டு, ரூ.3,490க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை உள்ளது. இதுதொடர்பாக சேலம் தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மினி பிரிட்ஜ் விலை, அரசு அலுவலர்களுக்கு ரூ.300 குறைக்கப்பட்டு ரூ.3,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசு அலுவலர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பித்து சலுகை விலையில் மினி பிரிட்ஜ் வாங்கிக்கொள்ளலாம்.மினி பிரிட்ஜ் தேவை என ஆன்லைனில் புக்கிங் செய்தால், 15 நாட்களுக்குள் வீட்டுக்கே பிரிட்ஜ் வந்து சேரும். இந்த சலுகையை பயன்படுத்தி, அரசு ஊழியர்கள் மினி பிரிட்ஜ் வாங்கிக்கொள்ளலாம்,‘‘ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி