தமிழக தொடக்கப்பள்ளிகளின் இன்றைய நிலை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2013

தமிழக தொடக்கப்பள்ளிகளின் இன்றைய நிலை...

தமிழக கிராமப்புறங்களில் எண்பது சதவீதம் ஈராசிரியர் பள்ளிகளே. ஆனால் வருடத்தில் கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் அப்பள்ளியில் ஐந்து வகுப்புகளூக்கும் ஓராசிரியரே கற்பிக்கவேண்டியுள்ளது.ஒரு ஆசிரியருக்கு தற்செயல் விடுப்பு 12 நாட்கள் வீதம் = 24 நாட்கள்ஒரு ஆசிரியருக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு 3 நாட்கள் = 6நாட்கள்தலைமையாசிரியர் கூட்டம் குறைந்த்பட்சம் = 8 நாட்கள்பயிற்சி நாட்கள் குறைந்த்பட்சம் (தலைமையாசிரியருக்கு)= 20நாட்கள்பயிற்சி நாட்கள் குறைந்த்பட்சம் (உதவியாசிரியருக்கு) = 10 நாட்கள்மூன்று பருவத்திற்கும் பாடபுத்தகங்கள் எடுக்க = 4 நாட்கள் மூன்று பருவத்திற்கும் நோட்டு புத்தகங்கள் எடுக்க = 3 நாட்கள் மூன்று பருவத்திற்கும் சீருடை எடுக்க = 3 நாட்கள் விலையில்லா செருப்பு கிரையான்ஸ் மற்றும் பை எடுக்க = 3 நாட்கள் ஆக மொத்தம் பள்ளி வேலை நாட்கள் 210 ல் குறைந்த்பட்சம் 71 நாட்கள் இப்பள்ளிகள் ஓராசிரியராக செயல்படுகின்றது.(இதில் ஆசிரியரின் மருத்துவ விடுப்பு, அவசர தபால்கள் அலுவலகத்திற்கு கொண்டு செல்வது, புள்ளிவிவரங்கள் தயாரிப்பது, தேர்தல் பணி, வாக்காளர் சேர்ககை, புகைப்படம் எடுத்தல் பஸ் பாஸ், மாணவர் கல்வி உதவித்தொகைக்கு அலைவது, கட்டுமானப்பணி மற்றும் இன்னும் சிலவற்றை சேர்க்கவில்லை இதில் மாணவன் எடுக்கும் விடுப்பு கற்பித்தல் நடத்த முடியத தேர்வு நாட்கள் உள்ளது.இதில் அதிகபட்ச கொடுமை என்னவென்றால் மேற்கண்ட ஈராசிரியர் பள்ளிகளில் சமூகத்தில் கடைக்கோடியில் உள்ள புறக்கணிப்பிற்கு ஆளான குழந்தைகளே படிக்கின்றன.இன்றைய அரசு மாணவர்களின் தரமான கல்விக்காக அடிப்படைக்கட்டமைப்பிற்கும் பெருமளவு ஆசிரியர் நியமனம் என கடினமான நிதி நெருக்கடியிலும் பெருத்த செலவு செய்கிறது.இன்றைய குழந்தைகளே நாளைய பாரதம் என்பதில் நம்பிக்கை கொண்டு விலையில்லா மடிகணினி விலையில்லா மிதிவண்டி என தாரளம் காட்டி கல்வித்துறைக்கு அற்புதமான் பொற்காலம் அமைத்துள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரம் இவ்வரசின் கவனத்திற்கு சென்றால் நிச்சயம் இந்நிலை மாறும

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி