ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார் செய்வதற்கான இலவச சிறப்பு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார் செய்வதற்கான இலவச சிறப்பு பயிற்சி.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் கல்வி - வேலைவாய்ப்பு மையம், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார் செய்வதற்கான இலவச சிறப்பு பயிற்சிகளை பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்க இருக்கிறது.பயிற்சிகள் சேவை அடிப்படையில் தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயார் செய்யும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பெயர் பதிவுக்கு, டாக்டர் அம்பேத்கர் கல்வி - வேலைவாய்ப்பு மையம், நவபாரத் மெட்ரிக் பள்ளி கட்டடம், 14 ஏ, சோலையப்பன் தெரு, சென்னை - 600 017 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.அல்லது daeeccchennai@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் பெயரைப் பதிவு செய்யலாம். பயிற்சி வகுப்புகள் மார்ச் 16-ஆம் தேதி தொடங்குகின்றன. கூடுதல் விவரங்களுக்கு 94449 82364 அல்லது 94980 80304 அல்லது 044 - 2834 1456 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி