தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். ஜெயம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் நந்தகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பழனியப்பன், கள்ளக்குறிச்சி சின்னதுரை, கண்டாச்சிபுரம் அந்தோனிராஜ், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி ரவி, சங்கராபுரம் அமுதாகார்த்திகேயன், செஞ்சி சையது ரிஷ்வான் நர்சரி பள்ளி வியுலாசெல்வராஜ், ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகி வீரதாஸ், கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி பள்ளி வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஓரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு எவ்வித நிபந்தனையின்றி அங்கீகாரம் வழங்க வேண்டும்.பள்ளி அமைவிடம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு விலக்களிக்க வேண்டும். பள்ளி வாகன விபத்துகளுக்கு பள்ளியின் நிர்வாகியை கைது செய்வதை கண்டிக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை தளர்த்தி பழைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இலவச கட்டாய கல்வி திட்டத்தில் மாணவர்களை அரசே தேர்வு செய்துகல்வி கட்டணத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தால்தான் சிக்கல் தீர்வு காண முடியும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி தரக்கோரி சென்னையில் வரும் 11ம் தேதி பள்ளி கல்வி இயக்குனரை சந்தித்து மனு அளிக்க அனைவரும் திரளாக கலந்துகொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆலம்பூண்டி ராஜாதேசிங்கு நர்சரி பள்ளி வெங்கடேசன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி