ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2013

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி

பள்ளிகளில் கற்பித்தல் மட்டுமல்லாமல், பழகும் முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், மாணவர்களின் திறமைகள் மிளிரும்என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது ஒரு தனியார் அமைப்பின் ஆய்வு."கல்வி முறையில் மாற்றம் தேவை":கல்வி கற்பிக்கும் முறையை மாற்றினால் எந்தக் குழந்தையும் கல்வியில் சிறந்து விளங்க வைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது டீச் ஃபார் இந்தியா அமைப்பு. கற்பித்தலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக கடந்த 8 மாதங்களாக சென்னையில் உள்ள 7 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவை மாநகராட்சி அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. டீச் ஃபார் இந்தியா அமைப்பின் மூலம், கற்றுக் கொண்டதை இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி:டீச் ஃபார் இந்தியா அமைப்பின் வகுப்புகள் 7 மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு வகுப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவது, ஒழுக்கம், கீழ்படிதல் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த மாணவர்களிடம் தமிழில் கேள்வி கேட்டால் கூட ஆங்கிலத்தில்தான் பதில் கிடைக்கிறது. சரியோ, தவறோ ஆங்கிலத்தை பேசத் தொடங்கும்போதுதான் அதனை பழக முடியும் என்பதால் மாணவர்களை அவ்வாறு ஊக்குவிப்பதாக டீச் ஃபார் இந்தியா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதிலும் வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுவதால் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை காண முடிகிறது.அரசுப் பள்ளியை விரும்பும் பெற்றோர்:கற்பித்தல் முறையில் மட்டுமல்லாமல், மாணவர்களிடம் பழகும் அணுகுமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்ட புதிய உத்திகளால், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. இந்த இனிய மாற்றங்களின் விளைவாக, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக இந்த வருடம்ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி