முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.2011 - 12 ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் உருவான 700 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் உள் மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும், பிறகு பிற மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.சென்னை மாவட்டத்தில் 5 காலிப் பணியிடங்கள் மட்டுமே இருந்தன.10 தேர்வர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 5 பேர் கண் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் ஒதுக்கீடுகளைப் பெற்றவர்கள் ஜூன் மாதம் 3ஆம் தேதி பணியில் சேர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி