இனி ஆங்கிலம் எளிது: தயாராகிறது இலவச புத்தகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2013

இனி ஆங்கிலம் எளிது: தயாராகிறது இலவச புத்தகம்.

மதுரை மாவட்டத்தில் 6, 7, 8ம் வகுப்புகளில் ஆங்கில பாடத்தில் பின்தங்கிய மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான எளிய முறையில் ஆங்கிலம்"புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நாகராஜ முருகன் இருந்தபோது, 15 கல்வி வட்டங்களிலும், மூன்று முதல் 8ம் வகுப்பு வரையானமாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில்"கல்வி திறமை" ஆய்வு செய்யப்பட்டது. தமிழ், ஆங்கில எழுத்துக்களை எழுதுவது, வாசிப்பது, கணிதத்தில் இரண்டு"டிஜிட்" எண்களை கூட்டுதல், பெருக்குதல் போன்ற திறன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆங்கில எழுத்துகளைக்கூட வாசிக்க தெரியாத மாணவர் எண்ணிக்கை 13,707ம்,"டிக்டேட்" செய்ததை எழுதத் தெரியாதவர் 19,896ம் உள்ளனர் என தெரிந்தது.குறிப்பாக, 8ம் வகுப்பில் மட்டும் 5,424 மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களை வாசிக்க தெரியவில்லை. சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட்டது. "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" என்ற புத்தகமும் தயாரிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்திற்கு ஆட்சியர் ஒப்புதல் அளித்தார். இதனால் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி