படிக்கும் பள்ளியைப் பொறுத்தே மாணவர்களின் ஆக்கத் திறன் அமையும் என்ற பொதுவான நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சி. 500-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில், இடம் பெற்ற படைப்புகள் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தாக கூறுகின்றனர் மாணவர்கள்.அறிவியல் படைப்புகளில் சமூக நோக்கம்:இருட்டு என்று சலித்துக் கொள்வதை விட ஒரு விளக்கு ஏற்றி வைப்பது மேல் என்று சொல்லப்படுவது உண்டு. அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியலில் சாதிப்பது கடினம் என்று ஒதுக்கிவிடாமல், ஆசிரியர்களின் இடையறாத ஊக்குவிப்பின் காரணமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர் இந்த அரசுப் பள்ளிமாணவர்கள். ஈரோடு மாவட்டம், நாதகவுண்டம் பாளையத்தில் உள்ள ஓர் அரசு நடுநிலைப் பள்ளியில்தான் இத்தகைய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சமுதாயத்தில் தற்போது நிலவும் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருந்த படைப்புகள், மாணவர்களின் சமூகநோக்கத்தையும் வெளிப்படுத்தின."அரிய தகவல்களை அறிய முடிந்தது" : தனியார் பள்ளிகளுக்கு நிகராக...:செயற்கை உரங்களால் ஏற்படும் தீமைகள், ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் ஏற்படும் விளைவுகள், புவி வெப்பமயமாதல் ஆகியவை குறித்த விளக்கங்களை மாணவர்கள் அளித்தனர். கண்காட்சியை பார்வையிட்டவர்கள், பல்வேறு புதிய தகவல்களையும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தனர். மேலும் பல அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய கண்காட்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். தனியார் பள்ளிகளைப் போன்று தங்கள் பள்ளியிலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது மகிழ்ச்சியான அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்.கல்வியாளர்களின் நீங்காத ஆதங்கம்: ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த நிகழ்வு:தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை கொண்டு வர முடியவில்லை என்பது கல்வியாளர்களின் பொதுவான ஆதங்கமாக உள்ளது. இந்த நிலை மாற அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கண்காட்சிகள், அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்க சக்திக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்ற கருத்தையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி