தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல், டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக ஜூலை 4ம், இரண்டாவது கட்டமாக அக்.,31ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து, தாவரவியல் பட்டதாரிகளை தவிர பிற பிரிவுகளை சேர்ந்த பட்டதாரிகளுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.அப்போது விடுபட்ட பட்டதாரிகளுக்கு, நேற்று ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் ஒதுக்கி, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தாவரவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு இல்லை.பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் கூறியதாவது: தாவரவியலில் 500 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரியவில்லை, என்றனர்.
Mar 6, 2013
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Hi botany candidates.... onemore time board fails to publish our result on Friday means Wt our next move friends
ReplyDeleteby botany candidate...Reply
please send mail to this address we can solve our problem cmcell@tn.gov.in
DeleteWe have already sent mail to cmcell but no respnse for it. By theni dist botany candidates
ReplyDelete