சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2013

சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்.

சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச்சேர்ந்த, 50.14 லட்சம் மாணவ, மாணவிகள், மதிய உணவுத் திட்டத்தில், சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். 30 ஆண்டுகளாக சாதம், சாம்பார் என, சாப்பிட்டு வருவதால், மாணவர்களிடையே சத்துணவு மீதான ஆர்வம் குறைந்து, சரியாக சாப்பிடுவதில்லை என, கூறப்பட்டது. இதையடுத்து, காலத்திற்கேற்பவும், குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் அரசு இறங்கியது. நிபுணர்கள் ஆலோசனைப்படி, சத்துணவு திட்டத்தில், 13 வகையாக உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள்மேல்நிலைப் பள்ளியில், விதவிதமான உணவு வழங்கும் திட்டம், நேற்று தொடங்கியது. திட்டத்தை, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். மேயர் சைதை துரைசாமி, சமூகநலத்துறை செயலர் பஷீர்அகமது, மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வழக்கமாக சாதம், சாம்பார் என, சாப்பிட்ட மாணவர்கள், நேற்று வழங்கிய தக்காளி சாதம், மிளகுத்தூள் முட்டையை விரும்பி சாப்பிட்டனர். சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சத்துணவில் விதவிதமான உணவு வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு மையம் என, 32 இடங்களில் முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அறிந்தபின், எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படும்" என்றார்.புதிய திட்டத்தின் படி முதல் வாரம், மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: காய்கறி பிரியாணி; மிளகுத்தூள் முட்டை
செவ்வாய்: கொண்டக்கடலை புலாவ், தக்காளி முட்டை மசாலா
புதன்: தக்காளிசாதம், மிளகுத்தூள் முட்டை
வியாழன்: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை
வெள்ளி: கறுவேப்பிலை சாதம் (அ) கீரைசாதம்- முட்டை மசாலா, வறுத்த உருளைக்கிழங்கு.
இரண்டாவது, நான்காவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: சாம்பார் சாதம், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய்: மீல்மேக்கருடன், காய்கறி கலவை சாதம், மிளகுத்தூள் முட்டை
புதன்: புளிசாதம், தக்காளி முட்டை மசாலா
வியாழன்: எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா, சுண்டல்
வெள்ளி: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொறியல்
இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, புதிய வகை உணவுகள் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. விரைவில், இது நடைமுறைக்கு வர உள்ளது.
நாள் உணவு வகைகள்
திங்கள்: தக்காளி சாம், வேகவைத்த முட்டை
செவ்வாய்: கலவை சாதம், சுண்டல்
புதன்: காய்கறி புலாவ் சாதம், வேகவைத்த முட்டை
வியாழன்: எலுமிச்சை சாதம், வேகவைத்த முட்டை
வெள்ளி: கலவை சாதம

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி