தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டுவருவதாக அதன் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படாத நிலையில், இன்றைய சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை திருத்தி அமைக்க ஆர்.நட்ராஜ் தலைவராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் மாற்றுவது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் சி.ஷோபினி, சி.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள்அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் திடீரென வெளியிட்டது. புதிய பாடத்திட்டத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ. என அனைத்து தேர்வுகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக பிரிவு அதிகாரி, உதவித்தொழிலாளர் ஆய்வாளர்,உதவியாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்-2 தேர்வு நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு என்றும், நேர்காணல் அல்லாத பணி இடங்களுக்கான தேர்வும் என்றும் 2 தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப்-2 தேர்வில் இருந்த மொழித்தாள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அடியோடு நீக்கப்பட்டது. 200 கேள்விகளும் பொதுஅறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூட்) என்ற புதிய பகுதிசேர்க்கப்பட்டு இருக்கிறது.இதேபோல், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்-4 தேர்வில் மொழித்தாள் பகுதியில் கேள்விகளின் எண்ணிக்கை 100 -லிருந்து 50 குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாகபொது விழிப்புத்திறன் என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளனர். குரூப்-4 தேர்வைப் போல அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் வி.ஏ.ஓ. தேர்வில் மொழித்தாள் கேள்வி எண்ணிக்கை 100-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக கிராம நிர்வாகம் மற்றும் ஆப்டிடியூட் பகுதிகளை சேர்க்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப பணிகளுக்கான அனைத்து தேர்வுகளிலும் குறிப்பிட்ட பாடத்துடன் கூடுதலாக பொதுஅறிவு பகுதியை சேர்த்து இருக்கிறார்கள். குரூப்-1 மெயின் தேர்வில் பொதுஅறிவு தாள்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.யு.பி.எஸ்.சி.யைப் போல டி.என்.பி.எஸ்.சி.யும் தமிழ்மொழியை புறக்கணிக்கும் வகையிலும் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தற்போதையபாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்.சிவில் சர்வீசஸ் தேர்வுமுறை மாற்றப்பட்டு பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிவில் சர்வீசஸ் புதிய தேர்வுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல அனேகமாக டி.என்.பி.எஸ்.சி.யும் புதிய பாடத்திட்டத்தை நிறுத்திவைக்கும் என்றே தெரிகிறது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, "புதிய பாடத்திட்ட பிரச்சினை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். அரசிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கப்படும்" என்றார்.
Mar 17, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி