யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்" என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், 6வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சந்திர காந்தா, வரவேற்புரையாற்றினார். கவர்னர் ரோசய்யா, தலைமை தாங்கினார்.விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும்; 6,176 பேருக்கு முதுகலை பட்டமும்; 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும்; 5,937 பேருக்கு பட்டய சான்றிதழும்;198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்பட்டன.உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: வெளிநாடுகளில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பது, பெருமையாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது.பட்டமளிப்பு விழாவில், பொதுவாக, ஒரே வயதினரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இங்கு இளைஞர்கள், நடுத்தர மற்றும் முதியவர்கள் என, அனைவரையும் காண முடிகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் கற்பதற்கான வாய்ப்பை, திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது.திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படித்த பலர், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - டி.இ.டி., தேர்வாகி உள்ளனர். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறுகையில்,"மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பல்நோக்கு பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இணையவழி மாணவர் சேர்க்கை மற்றும் குறுஞ்செய்தி முறையில், தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது" என்றார்.
Mar 13, 2013
Home
NEWS
UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு.
UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி