10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும் - உயர்கல்வித் துறை அமைச்சர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2013

10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும் - உயர்கல்வித் துறை அமைச்சர்.

திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் முனுசாமி கூறினார். இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்தே.மு.தி.க.,:- பாபு முருகவேல்: திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்ற, 40 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இவர்களின், கல்வித் தகுதி தான் இதற்குக் காரணமாக உள்ளது. மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர், திறந்த நிலை பல்கலையில், பட்டம் பெற்று, வேலை கிடைக்காமல் உள்ளனர். எனவே, திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கவேண்டும்.அமைச்சர் முனுசாமி: "திறந்தநிலை பல்கலையில், பட்டம்பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக்கூடாது' என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் தெளிவாக கூறுகின்றன. மார்க்சிஸ்ட்- ராமமூர்த்தி: திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் பயின்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்கக் கூடாது என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், வெளியிடப்பட்ட இந்த அரசாணையை மறுபரிசீலனை செய்யவேண்டும்.உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்: 10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும். 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்பதே, முறை சார்ந்த கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த நிலை பல்கலையில் பயில்வது, முறை சாரா கல்வியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி