ஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும்: அன்புமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2013

ஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும்: அன்புமணி

சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதி தேர்வைக் கைவிட வேண்டும் என்றுபாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்:- தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்பணிக்கான தகுதித் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17,18-ம்தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஒன்றரை சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் சமூக நீதியாகும். அண்டை மாநிலமான ஆந்திராவில் இத்தகைய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 40 சதவீதம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் செட் தகுதித் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், மற்ற பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், இந்த நியதிக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெறஅனைத்துப் பிரிவினரும் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவே, சமூக நீதிக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே இருந்தவாறு, வேலைவாய்ப்பு அலுவலகபதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை பணியமர்த்தும் முறையைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி