பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்படுகின்றன. அதே நாளில் அந்தந்தப் பள்ளிகளில் இணையதளம்மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்படும் வியாழக்கிழமை முதல் 15 நாள்களுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதிக்கான பதிவு மூப்பே வழங்கப்படும். இதற்கு குடும்ப அட்டை,ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். இதன்மூலம், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி