பி.இ., சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவின் கீழ், நேற்று முன்தினம், 420 இடங்கள் நிரம்பிய நிலையில், நேற்று காலை, "விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வுக்கு வர வேண்டாம்" என அண்ணா பல்கலை, எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் அனுப்பியது.பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், "நேற்றே, பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. குறிப்பாக, பி.சி., பிரிவு இடங்கள், முழுவதும் நிரம்பிவிட்டன. காலியிடங்கள்இல்லாத நிலையில், மாணவர்கள், தேவையில்லாமல் வந்து ஏமாற வேண்டாம்என்பதற்காக, காலையில் எஸ்.எம்.எஸ்., அனுப்பினோம்" என தெரிவித்தார்.ஆனாலும், ஏராளமான மாணவர்கள் கலந்தாய்வுக்கு வந்துவிட்டனர். காலியிடங்கள் இல்லை என, தெரிந்ததும், முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என, பல்கலை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி