ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மூன்று நாள்களில் 4.24 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.முதல் நாளான திங்கள்கிழமை 1.48 லட்சம் விண்ணப்பங்களும், செவ்வாய்க்கிழமை89 ஆயிரம் விண்ணப்பங்களும், புதன்கிழமை 1.87 லட்சம் விண்ணப்பங்களும்விற்பனையாகியுள்ளன.இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை 6 லட்சத்த்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்டகல்வி அலுவலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால்கடும் நெரிசல் ஏற்பட்டது. அதோடு, விண்ணப்பம் பெற நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்தது.இந்த ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட்டு வருவதால், எந்தவித காத்திருப்பும் இல்லாமல் உடனுக்குடன் விண்ணப்பத்தைப் பெற்றுச்செல்ல முடிவதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.ஆசிரியர்களுக்குஇது கூடுதல் பணிச்சுமை என்பதையும் பல ஆசிரியர்கள் மறுத்தனர்.கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்துச் செலவு என ஏதும் இன்றி அவரவர்வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த ஆண்டு விண்ணப்பங்களை விற்பது நல்ல யோசனைதான் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி