மருத்துவக் கலந்தாய்வு: சென்னை மருத்துவ கல்லூரிக்கு மவுசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2013

மருத்துவக் கலந்தாய்வு: சென்னை மருத்துவ கல்லூரிக்கு மவுசு.

மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க, சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்.எம்.சி.,) தேர்வு செய்தனர்.தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாநிலஒதுக்கீடாக உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது.முதல் நாள் நடந்த, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முறையே, 44, 3, 2 என, மொத்தம், 49 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வழங்கப்பட்டன.மீதியுள்ள, 1,774 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும், 85பி.டி.எஸ்., இடங்களுக்கான, பொது பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களை பிடித்தோர், எம்.பி.பி.எஸ்., படிக்க, எம்.எம்.சி., கல்லூரியை தேர்வு செய்தனர்.இதன் பின், முதல்கட்ட கலந்தாய்வு, வரும், 22ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க, "கட்-ஆப்" மதிப்பெண்கள் மற்றும்இனசுழற்சி அடிப்படையில், ஒரு நாளுக்கு சராசரியாக, 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 909 பி.டி.எஸ்., இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்தப்பட்டுள்ள, 185 எம்.பி.பி.எஸ்., இடங்கள், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், ஜூலை, இரண்டாம் வாரம் துவங்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி