"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி அளிக்க, ஏழு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அடுத்த மாத துவக்கம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என தெரிகிறது. "முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த உடன், ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்கப்படும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி