மொபைல் பாங்கிங் பற்றித் தெரியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2013

மொபைல் பாங்கிங் பற்றித் தெரியுமா?

இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் `மொபைல்பாங்கிங்’ Mobile Banking வசதி ஒரு வரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர்வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலையும் அவஸ்தையைப் பெருமளவு குறைத்துள்ளது. மொபைல் பாங்கிங்’ Mobile Bankingவசதி மூலம் நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை அறியலாம்.ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதிவு செய்யலாம், பணப்பரிமாற்றம் செய்யலாம்… இப்படிப் பல வசதிகள்.உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பாங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷனல் பேமண்ட்ஸ்கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) என்ற அமைப்பால் அறிமுகம் செய்யப்பட்ட `மொபைல் பாங்கிங்’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிறது. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக்கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என்.பி.சி.ஐ.தற்போது ஒரு வாடிக்கையாளர் செல்போன் மூலம் ஒருநாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணையும்போது இந்த `லிமிட்’ அளவு கூடலாம் என்று கருதப்படுகிறது. இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் மொபைல் பாங்கிங் சேவையை வழங்கி வருகின்றன.`மொபைல் பாங்கிங்’கை பொறுத்தவரை அது தவழும் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப்புஇருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில அடிப்படைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல் பாங்கிங்’ சேவைவசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(குறிப்பு: நல்ல அறிமுகமான, நம்பகமான நண்பரிடம் இதன் விழி முறைகளை கற்று பின்பு பயன்படுத்துவது, தவறுகள ஏற்படாமல் இருக்க உதவும்.)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி