13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் "பேஸ்புக்" பயன்படுத்தக்கூடாது: டில்லி உயர்நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2013

13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் "பேஸ்புக்" பயன்படுத்தக்கூடாது: டில்லி உயர்நீதிமன்றம்.

சமூக வலைதளங்களில் ஒன்றான, "பேஸ்புக்"கில், 13 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு துவங்க டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது."பேஸ் புக்" வலைதளத்தில், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கணக்குகள் துவங்கி, தகவல் தொடர்பு மேற்கொள்கின்றனர். குழந்தைகள், படிக்கும் நேரத்தில், இதுபோன்ற வலைத்தளத்தில் நேரத்தை செலவிடுகின்றனர்; அதைத் தடுக்க வேண்டும் என கோரி, டில்லி ஐகோர்ட்டில், பொது நல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பி.டி.அகமது மற்றும் நீதிபதி, விபு பக்ரு ஆகியோர், 13 வயதுக்குட்பட்டவர்கள்,"பேஸ்புக்"கில் கணக்கு துவங்க தடை விதித்தனர். இந்த எச்சரிக்கை, "பேஸ்புக்" வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது."பேஸ்புக்" வலைத்தளத்தின் முக்கிய பக்கங்களில், ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கணக்கு துவங்க தடை விதிக்கப்படுகிறது என, அந்த வலைதளம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பராக் திரிபாதி, ஐகோர்ட்டுக்கு உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி