பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது."தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம்,பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி