2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங் -களுக்கு18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2013

2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங் -களுக்கு18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகம் சார்பில் அதன் மாநில செய்தி தொடர்பாளர் திரு.செந்தில் தெரிவிக்கையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி 2013-14ஆம் கல்வியாண்டில் 100 அரசு /  நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 18.07.2013 அன்று தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும், 20.07.2013 அன்று முதுகலைஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்), 22.07.2013 அன்று முதுகலை ஆசிரியர் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடைபெற்றகலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என்றும், இதுகுறித்து  முறையான உத்தரவு அனைத்துமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்படும் என்றுதெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி