தமிழகத்தில் 55,667 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் படிக்கும் பள்ளி, மாணவர்களின் விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறையின் (இஎம்ஐஎஸ்) கீழ் இணையதளத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி அடையாள குறியீடு, பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டது. அதில் 2012,13 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.கடந்த பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் 2,824 பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியவில்லை. இதையடுத்து பதிவு செய்யாத பள்ளிகளைஜூலை27ம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: கல்வித்தகவல் மேலாண்மை முறையின் கீழ் 2,824 பள்ளிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே பதிவு செய்யப்படாமல் உள்ள பள்ளிகளுக்காக மீண்டும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை பயன்படுத்தி இஎம்ஐஎஸ் இணையதளத்தில் புதிய பதிவுகளை உருவாக்க வேண்டும். அதில் 2012,13ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்களை மட்டுமே வகுப்புவாரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர் பெயர், பிரிவு, தாய், தந்தை, முகவரி, தொழில், குடும்ப வருமானம் உள்ளிட்ட 30 விவரங்களை பதிய வேண்டும். இப்பணிகளை ஜூலை 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி