முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்ற பதவிகளில், 50க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2013

முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்ற பதவிகளில், 50க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளன.

முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்ற பதவிகளில், 50க்கும் மேற்பட்ட இடங்கள், காலியாக உள்ளன. பதவி உயர்வுக்கு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?கல்வியில், மிகவும் பின்தங்கியுள்ள பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், சி.இ.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன. திருச்சி, ஈரோடு, சேலம் என, பல மாவட்டங்களில், மாவட்ட அளவில், பல்வேறு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.தேர்வுத் துறையில், இணை இயக்குனர் பதவி (மேல்நிலை), தொடக்க கல்வித் துறை, இணை இயக்குனர், கருப்பசாமியிடம்கூடுதலாக தரப்பட்டுள்ளது.மற்றொரு இணை இயக்குனர், தங்கமாரிக்கு, டி.ஆர்.பி.,யில், கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறையில், பணியாளர் தொகுதி இணை இயக்குனர் கண்ணப்பனிடம், நூலகத் துறை, இணை இயக்குனர் பதவி, கூடுதலாக தரப்பட்டுள்ளது.துறையில், எப்போது பார்த்தாலும், ஆய்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும், காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னையில், முதல்வர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி