முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர். 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை. 27,500 ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை.பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் (அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று). அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விண்ணப்ப எண்ணையும், ஏதாவதுஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம்.இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி