ஓமலூர் ஒன்றிய ஏ.இ.ஓ. அலுவலக ஊழியருக்கான பணிகளை பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதாகபெற்றோர் மத்தியில் புகார்எழுந்துள்ளது.உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் போதுமான அலுவலர்கள் இல்லாத நிலையில் பணிப்பதிவேடு, ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆசிரியர்கள் கவனித்து வருகின்றனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய தபால்களை இவர்களே தட்டச்சு செய்து அனுப்புகின்றனர். இவ்வாறு பணியாற்றுவதால் பல பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வகுப்புக்கே வருவதில்லை என்று பெற்றோர் புகார் கூறுகின்றனர்.மேலும் சில ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு செல்வதாக ‘போக்கு’ காட்டி விட்டு பள்ளிக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு ‘எஸ்கேப்’ ஆவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள தேக்கம்பட்டி, ரெட்டிபட்டி காட்டுவளவு, குள்ளக்கவுண்டனூர், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்இந்நிலை தொடர்கிறது.இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மனோகரன் கூறியதாவது: உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த தட்டச்சர்கள் பலர் பதவி உயர்வில் சென்று விட்டனர். அந்தஇடம் காலியாக உள்ளது. அதே போல் எங்களது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் இரண்டு தட்டச்சர்களில் ஒருவர் பதவி உயர்வில் சென்று விட்டார். இதனால் உதவி தொடக்கக் கல்வி அலுவலக டைப்பிஸ்டுகள் டெபுடேசனில் பணியை கவனித்து வருகின்றனர். ஓமலூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தட்டச்சர் பதவி உயர்வில் சென்று விட்டார். இதனால் பணிகள் தேக்கம் அ¬ டவதைத் தடுக்க பள்ளி நேரத்துக்கு பின்னர் தட்டச்சு தெரிந்த ஆசிரியர்களை அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பில்லை. வீட்டில் வேலைக்காரர் வராவிட்டால் வீட்டில் இருப்பவர்களே வேலைகளை பகிர்ந்து கொள்வது போல தான் இதுவும். அரசு தட்டச்சர் காலியிடங்களுக்கு புதிய ஆட்களை நியமிக்கும் வரை நெருக்கடி தொடரும். இவ்வாறு மனோகரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி