திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2013

திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியானது.

வேலூர்:திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 106 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியில் இருந்து மே, 28 வரை தேர்வு நடந்தது.இதில், முதுகலை பட்ட படிப்பு மாணவர்கள், 7,492 பேரும், இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்கள், 97,207 பேரும் தேர்வு எழுதினர். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட நான்கு மையங்களில் இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்கள் 8 லட்சத்து 71 ஆயிரத்து 310 விடைத்தாள்களும் முது கலை பட்டப் படிப்பு மாணவர்களின், 50 ஆயிரத்து, 899 விடைத்தாள்களும் திருத்தப்பட்டது."தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டது," என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சையத் ஷபி கூறினார்.  ஆனால், தொழில் நுட்ப காரணங்களால் இணைய தளங்களில் நேற்று (ஜூலை 26) மதியம் வரை தேர்வு முடிவுகளை பார்க்க முடியவில்லை.இது குறித்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பின் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்ததாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி