முதுகலை ஆசிரியர் தேர்வு - ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்ய : டி.ஆர்.பி., எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு - ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்ய : டி.ஆர்.பி., எச்சரிக்கை.

"முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த, 1.68 லட்சம்பேரில், இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள், உடனடியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என, டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: வரும், 21ம் தேதி, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, போட்டித் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 1.68 லட்சம்பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்', www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை, 1.05 லட்சம் பேர் மட்டுமே, தங்களின், "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும், 63 ஆயிரம் பேர், பதிவிறக்கம் செய்யவில்லை. தேர்வு தேதி நெருங்கிவருவதால், அனைவரும், உடனடியாக, "ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேர்வு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என, நினைத்தால், தேவையில்லாமல் பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க, உடனடியாக,"ஹால் டிக்கெட்'டுகளை, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பஎண்களையும், பிறந்த தேதியையும், சரியாக பதிவு செய்து,"சப்மிட்' கொடுத்தால், "ஹால் டிக்கெட்' கிடைக்கும். அனைத்து தேர்வர்களுக்கும், "ஹால் டிக்கெட்' வெளியிட்டுள்ளோம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி