தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாகவெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.சட்டசபையில் கல்வித்துறை மானியக்கோரிக்கையில், "100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலையாகவும்; 50 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும்" என, அறிவிக்கப்பட்டது.கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை தரம் உயர்ந்த பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியாகவில்லை. தரம் உயர்வுக்கான அறிகுறி இருந்த நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் இறுதி வகுப்பு முடித்த மாணவர்களை தக்க வைக்க, இறுதி வரை முயற்சித்தனர். வேறு வழியின்றி, கடைசி நேரத்தில் டி.சி., கொடுத்ததால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.இந்நிலையில், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளின் பெயர் பட்டியலை, மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம், தற்போது வெளியிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில், இ.மலம்பட்டி, வேம்பத்தூர் பெரியகோட்டை, உலகம்பட்டி அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. "இதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த அளவிலான பள்ளிகளே, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன; வகுப்புகள் துவங்கிய நிலையில், பட்டியல் வெளியாகி இருப்பதால் 9, பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது" என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பட்டியல் தாமதமாக கிடைப்பதால், தரம் உயர்ந்த அரசு பள்ளிகளில் போதிய மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது. தரம் உயர்ந்த பள்ளிகளில் இருந்து, வெளியே சென்ற மாணவர்களை, மீண்டும் அதே பள்ளிக்கு அழைத்து வர முயற்சிக்கப்படும்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி