கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2013

கட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி.

மேட்டுப்பாளையம்:"ஊராட்சி பள்ளிகளில், ஆங்கிலக் கல்வி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டணம் இல்லாமல் இலவசமாக கல்வி கற்கப்படுகிறது&'&' என உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி தெரிவித்தார்.காரமடையை அடுத்த திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில், காரமடை உதவி தொடக்க கல்வி அலுவலர் குருசாமி பேசியதாவது:பெற்றோர், தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் தமிழக அரசு, துவக்கபள்ளியில் முதல் வகுப்பிலும், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில்ஆறாம் வகுப்பிலும், ஆங்கில வழி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.இதற்கு எவ்வித கட்டணமும் வசூல் செய்யாமல் இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே, பெற்றோர் இத்திட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி