நாகையில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: பெற்றோர் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2013

நாகையில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: பெற்றோர் அதிருப்தி.

நாகை அருகே, அரசு உத்தரவின்றி 65 பள்ளிகளுக்குதிடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் வெளியேற்றப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம், தலை ஞாயிறு ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் 65இயங்குகின்றன. இவற்றில், 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; 252 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.கல்வித் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில், மணக்குடி ஒட்டக்கூத்தர் திருமண மண்டபத்தில், நேற்று கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டதால், காலை 11:00 மணிக்கு, ஒன்றியத்தில் உள்ள 65 பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவ, மாணவியர் வெளியேற்றப்பட்டனர்.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை மூடிவிட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் பெற்றோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி