மாணவ, மாணவியருக்கு சீருடை சுதந்திரதினத்தன்று கிடைக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2013

மாணவ, மாணவியருக்கு சீருடை சுதந்திரதினத்தன்று கிடைக்கும்.

சுதந்திர தினத்தன்று, மாணவ, மாணவியர் புத்தாடை உடுப்பதற்கு வசதியாக, இரண்டாவது, "செட்' சீருடை, அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.மூன்றாவது, "செட்' சீருடை தீபாவளிக்கும், நான்காவது,"செட்' சீருடை, குடியரசு தின விழாவிற்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இம்முறை தரமான சீருடை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு, "செட்' சீருடைக்கு, 300 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இரண்டாவது,"செட்' சீருடை வினியோகம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், உடனடியாக சீருடை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி