பள்ளிகள், அங்கன்வாடிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு, சுத்தமாக உள்ளதா என, உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னையில், 10 மையங்களில், 20 மாதிரிகள் எடுத்து, தர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன், தமிழகம் நெய்வேலியில் உள்ள பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.அடுத்தடுத்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறையினரும், தமிழகம் முழுவதும் பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இதன்படி, சென்னையில் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களில், ஒரு வாரத்திற்கு மேலாக, உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, 350க்கும் மேற்பட்ட பள்ளி, அங்கன் வாடி மையங்களில் ஆய்வு நடந்துள்ளது. உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: ஒரு வாரத்தில் சென்னையில், 10 மையங்களில், சமைத்த உணவு மாதிரி; சமையலுக்கு பயன்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் மாதிரி என, இரண்டு விதமான மாதிரிகள் எடுத்துள்ளோம். மொத்தம், 20 மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த முடிவுகள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி