ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: முதல்வருக்கு 10 ஆயிரம் பேர் கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: முதல்வருக்கு 10 ஆயிரம் பேர் கடிதம்.

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அதனடிப்படையிலான பணி நியமனத்தில், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும், 10 ஆயிரம் பேர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில், டி.ஆர்.பி., நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி விகிதம், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு,மதிப்பெண் தளர்வு வழங்கலாம்என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருந்தும் இப்பிரிவினருக்கு, மதிப்பெண் தளர்வு வழங்கவில்லை.இது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது; ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல. இதில் தேர்ச்சி பெற்றால் தான், தனியார் பள்ளிகளிலும் வேலை செய்ய முடியும். மதிப்பெண் தளர்வு வழங்காதது, ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் செயல். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது.எனவே, தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும். அதற்கான ஆணையை, தமிழ் நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு, அரசு பிறப்பிக்க வேண்டும்.கடந்த 2012, அக்டோபரில், அரசு வெளியிட்ட, அரசாணை, 252ல், இடஒதுக்கீட்டின் அடிப்படையில், தகுதியை நிர்ணயிக்காததால், இந்த அரசாணை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது.மத்திய அரசு கூட, தன் அலுவலக குறிப்புகளில், இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என, கூறுகிறது. எனவே, எல்லா வகையிலும், முரணாக உள்ள, இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும், 10 ஆயிரம் பேர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி